Perambalur: Contract drivers and conductors submit a petition to the MLA requesting continued employment.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், பெரம்பலூர் கிளையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் டிரைவர்கள், கண்டக்டர்கள் தங்களுக்கு 3 ஆண்டுகள் வரை ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியலாம் என்று கூறிவிட்டு தற்போது ஒரு ஆண்டு கூட முடிவடையாத நிலையில் பணிக்கு வரவேண்டாம் என கிளை நிர்வாகத்தில் தெரிவித்ததனால், தொடர்ந்து எங்களுக்கு மூன்று ஆண்டு வரை பணி வழங்க வேண்டும் எனக் கோரி பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் சிவகுமாரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில் தெரிவித்திருப்பதாவது:
பெரம்பலூர் கிளையில் 27 பணியாளர்கள் 21.07.2025 முதல் 19.07.2026 வரை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் பணிபுரிந்து வந்துள்ளோம். எங்கள் நிறுவனம் StalWart தனியார் நிறுவனத்தில் ரூபாய். 23,000/- டெபாசிட் செய்து ஓட்டுநர் மற்றும் நடத்துனராக பணிக்கு வந்துள்ளோம். அந்நிறுவனம் 3 வருடம் வேலை தருவதாக கூறி எங்களை பணியில் அமர்த்தினர். இப்போது 20.07.2026 அன்று பெரம்பலூர் தமிழ்நாடு அரசு போக்குவர கழகம் பணிக்கு செல்லும் போது உங்களது ஒப்பந்தம் காலம் முடிவடைந்து விட்டது. இனி யாரும் பணிக்கு வர வேண்டாம் என வெளியே அனுப்பி விட்டனர். இதனால் எங்கள் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்படுகின்றது. எனவே எங்களுக்கு கூறியதன் படி 3 ஆண்டுகள் வேலை வாய்ப்பு தர வேண்டும் என குறிப்பிட்டு இருந்தனர்.
மேலும் அந்நிறுவனம் 21.07.2025 முதல் 06.01.2030 வரை 3 வருடம் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய எங்களுக்கு அடையாள அட்டையும் வழங்கியுள்ளது. எனவே, இதனை மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அரசும் எங்களின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு எங்களுக்கு உடனடியாக ஒப்பந்தத்தின் அடிப்படையில் மீதமுள்ள இரண்டு ஆண்டுகளும் பணிபுரிய வழிவகை செய்யுமாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர். மனுவை பெற்றுக் கொண்ட எம்.எல்.ஏ சிவக்குமார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் தெரிவித்தார்.








kaalaimalar2@gmail.com |
9003770497