Perambalur: Councilors from the ruling party, including the Town Panchyat President, walk out, condemning the anti-democratic behavior of the deputy President!

பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடி பேரூராட்சியின் மன்ற கூட்டம் தலைவர் பாக்கியலட்சுமி செங்குட்டுவன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் ருக்குமணி முன்னிலை வகித்தார். கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் பேரூராட்சி துணைத் தலைவர் செல்வலெட்சுமி தொடர்ந்து கூட்டத்திற்கு வராததை கண்டித்தும், பிற நாட்களில் வந்ததாக கையெழுத்திட்டு செல்வதை கண்டித்தும், பேரூராட்சியில் வளர்ச்சி பணிகளை செய்ய விடாமல் தடுப்பதை கண்டித்தும், துணைத் தலைவர் செல்வலட்சுமி சேகர் பிற வார்டுகளுக்கு ஒதுக்கும் பணிகளைகூட தனக்கு ஒதுக்க வேண்டி அதிகாரம் செய்வதோடு, பூலாம்பாடி பேரூர் திமுக செயலாளராக இருப்பதால் அந்த பதவியை வைத்து கொண்டு, மிரட்டுவதை கண்டித்து, தலைவர் மற்றும் 11 வார்டு உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

அப்போது பூலாம்பாடி பேரூராட்சி தலைவர் பாக்கியலட்சுமி தெரிவித்தாவது: நான் பட்டியல் இனத்தை பெண் தலைவர் சேர்ந்தவர் என்பதால் என்னை தன்னிச்சையாக செயல்பட விடாமல் தடுக்கிறார். அலுவல் தொடர்பான மனுக்களை என்னிடம் கொடுப்பதே இல்லை. செயல் அலுவரிடம் கொடுக்கிறோர். அதை கேட்டால், நான் எங்கு பேசவேண்டுமோ , அங்கு பேசிக் கொள்கிறேன் என தெரிவிக்கிறார்.என்னை ஒரு தலைவராக மதிப்பில்லை. மேலும், துணைத் தலைவரின் செயல்பாடு மேலோங்கி இருக்க வேண்டும் என அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறார். பேரூராட்சியில் அனைத்து வார்டு பகுதிகளிலும் குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி மற்றும் அடிப்படை வசதிகள் சராசரியாக நடைபெற்று வருகிறது. ஆனால் துணைத்தலைவர் பேரூராட்சியின் நிர்வாகத்தை செயல்பட விடாமல் கடந்த வாரம் ஆட்களை தூண்டிவிட்டு கொண்டு முற்றுகை போராட்டம் நடத்தி பேரூராட்சி நிர்வாகத்திற்கும், தி.மு.க ஆட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்துகிறார். எனவே, துணை தலைவரை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

பின்னர், 12 உறுப்பினர்கள் உள்பட தலைவரும் கலைந்து சென்றனர். இதனால், மாதந்திர கூட்டம் நடக்காமல், ஒத்தி வைக்கப்பட்டது. ஆளும் கட்சிய சேர்ந்த துணைத்தலைவரை கண்டித்து, ஆளும் கட்சியை சேர்ந்த தலைவர் உள்ளிட்ட கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்த சம்பவம் பேரூராட்சி அலுவலகத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!