Perambalur: Court sentences youth who kidnapped and sexually harassed girl to 20 years in prison and fined Rs. 60,000!
போக்சோ வழக்கின் குற்றவாளிக்கு 20 வருடம் சிறை தண்டனையுடன், ரூ 60 ஆயிரம் அபராதம் விதித்து தண்டனை விதித்து பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பு விதித்துள்ளது.
பெரம்பலூர் அருகே உள்ள கல்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன் மகன் நல்லதுரை (30) என்பவர் அதே ஊரைச் சேர்ந்த சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக மருவத்தூர் போலீசார் கடந்த 2016 ஆம் ஆண்டு போக்சோ வழக்கு பதிவு செய்து, நல்லதுரையை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இவ்வழக்கின் விசாரணை முடித்து குற்ற இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இன்று குற்றம் நிரூபிக்கப்பட்டதால் வழக்கின் குற்றவாளி நல்லதுரை என்பவருக்கு சிறுமியை கடத்திய குற்றத்திற்காக 7 வருடம் சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதம் விதித்தும், போக்சோ குற்றத்திற்காக 20 வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்தும், குற்றவாளிக்கு 20 வருடம் சிறை தண்டனையும் ரூ.60 ஆயரம் அபராதம் விதித்தும் மகிளா நீதிமன்ற நீதிபதி இந்திராணி உத்தரவிட்டார். இந்தவழக்கில் சிறப்பாக செயல்பட்டு எதிரிக்கு தண்டனை பெற்றுத்தந்த போலீசாரை எஸ்.பி ஆதர்ஷ் பசேரா பாராட்டினார்.