Perambalur: Daring Robbery—Gold and Silver Worth ₹37 Lakhs Stolen After Breaking House Lock!

பெரம்பலூர் அருகே உள்ள வாலிகண்டபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் வசித்து வருபவர் அழகிரிசாமி மனைவி கோட்டம்மாள் (58), இவருக்கு கவிதா (35), காயத்ரி (30), என இரு மகள் உள்ளனர். அவர்கள் திருமணமாகிவிட்டது. அழகிரிசாமி சென்னை சிட்லப்பாக்கத்தில் உள்ள காதிபவனில் வேலை பார்த்து வருகிறார். கோட்டம்மாள் வாலிகண்டபுரத்தில் தங்கி விவசாயம் மற்றும் 100 நாள் வேலைக்கு சென்று வந்துள்ளார். கடந்த மார்ச்.20ம் தேதி சென்னைக்கு சென்றார். இன்று காலை அக்கம்பக்கத்தினர் வீடு திறந்து கிடப்பதாக போனில் தகவல் தெரிவித்தனர். இன்று மதியம் வந்து வீட்டை திறந்து பார்த்த போது, சுமார் 44 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து புகாரின் சம்பவ இடத்திற்கு வந்த மங்களமேடு வழக்குப் பதிவு செய்ததுடன், கைரேகை, மோப்பநாய் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் கொள்ளையர்களைஅடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே வீட்டில் தூங்கி தாய் மகளை தாக்கி 25 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இச்சம்பவம் அப்பகுதியில் இன்று பரபரப்பாக பேசப்பட்டது. வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்பவர்கள் போலீசில் தகவல் தந்து விட்டு செல்ல அறிவுறுத்தியும் பொதுமக்களின் அலட்சியமே இது போன்ற கொள்ளை சம்பவங்களுக்கு காரணமாகிவிடுகிறது. இது போன்று வீட்டை பூட்டி செல்பவர்கள் அக்கம்பக்கத்தினரிடமோ, அல்லது போலீசாரிடமோ நகைகள், பணத்தை ஒப்படைத்து சென்றிருந்திருந்தால் பாதுகாப்பாக திரும்ப வந்து பெற்றிருக்கலாம்.










kaalaimalar2@gmail.com |
9003770497