Perambalur: Decision to conduct the Stations of the Cross in a special way at the Holy Mother of God Shrine!
பெரம்பலூர் புனித பனிமயமாதா திருத்தலத்தில் வின்சென்ட் தே பால் சபையின் ஆலோசனை கூட்டம், பங்குத்தந்தை சுவக்கின் அடிகளார் தலைமையில் நடந்தது. தலைவர் மா. இராபின்சன் முன்னிலை வகித்தார். சபையின் செயலாளர் ஏசுதாஸ் கடந்த மாதத்திற்கான அறிக்கையை வாசித்தார்.
கடந்த மாத செயல்பாடுகள் குறித்து துணைச் செயலாளர் பிரகாஷ் விளக்கினார். செயல் திட்டங்கள் குறித்து துணைத் தலைவர் ரினோ பாஸ்டின் எடுத்துரைத்தார். பனிமய மாதா திருத்தலத்தை சார்ந்த உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை அவர்கள் வீடுகளுக்கு சென்று சந்திப்பது, மேலும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது, மற்றும் வரும் வாரங்களில் நடைபெறும் சிலுவைப் பாதையை சிறப்பாக நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.
மார்ட்டின் நிறைவு ஜெபம் செய்தார். உறுப்பினர்கள், ரினோ, கோல்டன் ஹார்வெஸ்ட் நெப்பேலியன், எல்.ஐ.சி ஸ்டீபன், அகஸ்டின், ஜேம்ஸ், மகளிர் ஒருங்கிணைப்பாளர் ரூபி மார்ட்டின், ஜெரின், இளைஞர் ஒருங்கிணைப்பாளர் ஜெரோம் ஃபுட் சசிகுமார் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர். பொருளாளர் ஜோதி பிரகாஷ், நன்றி கூறினார்.