Perambalur: Devotee dies after bike hits palm tree!

நாமக்கல் மாவட்டம், முள்ளுக்குறிச்சி அருகே உள்ள தெற்கு பாலாத்து காடு பகுதியை சேர்ந்தவர் செங்கோடன் (55). இவரும் அதே பகுதியை சேர்ந்த ஆலமரத்துக்காடு ஊனாத்தங்கல் வரதராஜ் (65), இவரும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கல்லங்குறிச்சி கோயில் திருவிழா பத்திரிக்கை வாங்கி ஊரில் கொடுப்பதற்காக இருவரும் பைக் ஒன்றில் இன்று காலை நாமக்கல் மாவட்டத்தில் இருந்து புறப்பட்டனர். வண்டியை செங்கோடன் ஓட்டி வந்தார். பைக், ஆத்தூர் – பெரம்பலூர் சாலையில் எசனை அருகே உள்ள காமராஜர் நகர் அருகே வந்த போது எதிர்பாரத விதமாக சாலையில் அருகே இருந்த பனைமரத்தின் மீது பலத்த வேகத்தில் மோதியது. இதில், பலத்த காயமடைந்த செங்கோடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தலை மற்றும் காலில் காயமடைந்த வரதராஜ் காயமடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஹைவே பேட்ரோல் போலீசார் மற்றும் எஸ்.ஐ செங்கதிர்செல்வன் உள்ளிட்டோர் காயமடைந்தவரை மீட்டு ஆம்புலன்சில் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த செங்கோடனின் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் ரூரல் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!