Perambalur: Devotees donate Rs. 8.91 lakh to Chettikulam Murugan Temple!
பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளத்தில் ஏகாம்பரேஸ்வரர் மற்றும் தண்டாயுதபாணி சாமி கோயில்கள் உள்ளது. கோயில் உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி, மலை மீது அமைந்துள்ள தண்டாயுதபாணி கோயில் வளாகத்தில் நேற்று அறநிலைத் துறை பெரம்பலூர் உதவி ஆணையர் உமா தலைமையில் நடந்தது. கோயில் செயல் அலுவலர் ஹேமாவதி, அறநிலையத்துறை ஆய்வாளர் சுமதி ஆகியோர் முன்னிலையில் உண்டியல் காணிக்கைகள் திறந்து எண்ணப்பட்டது. கோயில் பணியாளர்கள், ஐயப்ப சேவா சங்கத்தினர், தன்னார்வலர்கள் 35 பேர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். கடந்த 3 மாதங்களில் உண்டியலில் பக்தர்கள் ரூ.8 லட்சத்து 91 ஆயிரத்து 784 காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும் உண்டியலில் 7 கிராம் தங்கம், 352 கிராம் வெள்ளி ஆகியவையும் இருந்தது. இந்த தொகை கோயில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.