English summary : Perambalur Dhanalakshmi Srinivasan College of Arts and Science for Women, New Rotarckt Association Inauguration of new administrators
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ரோட்ராக்ட் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா
பெரம்பலூர் : தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரயில், ரோட்ராக்ட் சங்கத்தின் 17வது நிர்வாகிகள் பதவியேற்பு விழா, கல்லூரி கலையரங்கத்தில் இன்று நடைபெற்றது.
இவ்விழாவிற்கு, பெரம்பலூரி ரோட்டரி சங்கத் தலைவர் கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
மேலும், அவர் பேசுகையில், மாணவிகள் இந்த ரோட்ராக்ட் சங்கத்தின் மூலம் தன்னையும் மேம்படுத்திக் கொண்டு, தான் சார்ந்து இருக்கும் சமுதாயத்திற்கும் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும் என்று கூறினார்.
விழாவில், கல்லூரியின் முதல்வர் பேராசிரியை அப்ரோஸ் புதிய நிர்வாகிகளுக்கு உறுதிமொழி பிரமாணம் செய்து வைத்து வாழ்த்துக் கூறிய அவர் மேலும், பேசியதாவது :
ரோட்டராக்ட் சங்கம் 17 ஆண்டுகளாக செய்து வரும் பணிகளை எடுத்துக் கூறினார்.
இவ்விழாவிற்கு, பெரம்பலூர் ரோட்டரி சங்கச் செயலாளர் செந்தாமரைக்கண்ணன் கௌரவ விருந்தினராக கலந்துக் கொண்ட, அவர் ரோட்ராக்ட் சங்க செயல்பாடுகள் மற்றும் ரோட்டரி மாவட்டம் 3000-ன் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் நிகழ்ச்சிகள் குறித்தும் பேசினார்.
முன்னதாக, கல்லூரி ரோட்ராக்ட் சங்கத்தின் சென்ற ஆண்டு தலைவி மகாலெட்சுமி வரவேற்புரை வழங்கி, ஆண்டறிக்கை வாசித்தார்.
பின்னர், புதிய தலைவியாக பதவியேற்ற காவியா, இந்த ஆண்டு செய்ய இருக்கும் திட்டப் பணிகளைப் தெரிவித்தார்.
ரோட்டராக்ட் சங்கச் செயலாளர்காயத்ரி நன்றி கூறினார்.
விழா ஏற்பாடுகளை கல்லூரியின் ரோட்ராக்ட் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் செல்வகுமாரி, ரெபேக்கால் மற்றும் ரோட்ராக்ட் சங்க மாணவிகள் ஏற்பாடு செய்து இருந்தனர்.