Perambalur: Diploma in Aari embroidery, textile printing training for S.C., & S.T. youth; Collector information!

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) முலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது சென்னை, வேளச்சேரியில் உள்ள விவேஷியஸ் அகடாமி (Vivacious Academy) நிறுவனம் மற்றும் தாட்கோ இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு டிப்ளமோ ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சிடுவதற்கான (Diploma In Aari Embroidery and Hand Printing On Textiles) பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இப்பயிற்சியினை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்த பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும், 18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

இப்பயிற்சிக்கான கால அளவு 30 நாட்கள் ஆகும். மேலும், சென்னை வேளச்சேரியில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கி படிக்கும் வசதியும் இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு இந்திய தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தால் NSDI (National Skill Development of India) அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும்.

இப்பயிற்சியினை பெற www.tahdco.com என்ற தாட்கோ இணையதளம் முகவரியில் விண்ணப்பிக்கலாம். தங்கும் விடுதி பயிற்சி உபகரணங்கள் மற்றும் உணவு உட்பட செலவினம் தாட்கோ மூலம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர், தாட்கோ, மாவட்ட மேலாளர் அலுவலக தொலைப்பேசி 04328 – 276317 என்ற எண்ணிலும், அலுவலகத்தை நேரில் அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து பயனடையுமாறு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!