Perambalur District Administration and Private Education Institutions Dengue Awareness Campaign
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர், வேப்பூர் ஒன்றியங்களில் உள்ள டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்புள்ள பகுதிகளாக கண்டறியப்பட்ட 27 ஊராட்சிகளுக்குட்பட்ட 34 குக்கிராமங்களில் மாவட்ட நிர்வாகம், தனியார் கல்விக் நிறுவனங்கள் சார்பில் டெங்கு விழிப்புணர்வு பிரச்சார பயண நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா கொடியசைத்து தொடங்கி வைத்தார். 1500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
பெரம்பலூர் ஒன்றியத்தில் அம்மாபாளையம், பொம்மனப்பாடி, சத்திரமனை, எசனை, எளம்பலூh;, களரம்பட்டி, லாடபுரம் உள்ளிட்ட ஊராட்சிகளில் 7 குக்கிராமங்களிலும்,
வேப்பந்தட்டை ஒன்றியத்தில் அன்னமங்கலம், அரசலூர், குடிகாடு, அனுக்கூர், எறையூர், வி.களத்தூர் பாதாங்கி, கை.களத்தூர், நெய்குப்பை, தேவையூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் 10 குக்கிராமங்களில், ஆலத்தூர் ஒன்றியத்தில் அருணகிரிமங்களம், செட்டிக்குளம், எலந்தங்குழி, கீழமாத்தூர், கொளத்தூர், நொச்சிக்குளம், ஜமீன்பேரையூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் 9 குக்கிராமங்களிலும், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் கீழப்புலியூர், குன்னம், சிறுமத்தூர், திருமாந்துறை, பெரியவெண்மணி, புதுக்குடிசை உள்ளிட்ட ஊராட்சிகளில் 8 குக்கிராமங்கள் என மொத்தம் 34 குக்கிராமங்களில் டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தப்படவுள்ளது.
மேலும், இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஒவ்வொரு கிராமத்திற்கும் 50 மாணவ மாணவிகள், சுகாதாரப் பணியாளர்கள், வருவாய்த்துறை மற்றும் வளர்ச்சித்துறை அலுவலர்கள் குழுக்களாக பிரிந்து, ஒவ்வொரு குக்கிராமத்திலும் உள்ள அனைத்து தெருக்களுக்கும் சென்று அத்தெருவில் உள்ள அனைத்து வீடுகளிலும் ஆய்வு மேற்கொண்டு, காய்ச்சலால் எவரேனும் பாதிக்கப்பட்டுள்ளனரா, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபா;கள் உரிய சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனரா என்று ஆய்வு செய்ய உள்ளனர்.
மேலும், டெங்கு காய்ச்சல் பரவும் முறை, அந்நோய் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக சுற்றுப்புற சுகாதாரம், ஏடிஸ் கொசு உற்பத்தியாகும் இடங்கள், டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள், நோய் வந்தால் என்ன செய்ய வேண்டும் போன்றவற்றை பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி விளக்கமாக எடுத்துரைக்க உள்ளனா;.
மேலும், அவருடைய இல்லங்களில் வீட்டு பயன்பாட்டிற்காக சேகரித்து வைக்கப்பட்டுள்ள தண்ணீரில் டெங்கு கொசுப் புழுக்களை உருவாக்கும் லார்வாக்கள் உள்ளனவா என்று ஆய்வு செய்ய உள்ளனர். இக்குழுவில் வட்டார மருத்துவ அலுவலர், தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் துப்புறவு பணியாளர்கள் உள்ளிட்ட குழுவினர் மேற்கண்ட குக்கிராமங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மேற்கொள்ள உள்ள மாணவ மாணவிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க உள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் மாணவ-மாணவிகள், தன்னார்வலர;கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரின் முழு ஒத்துழைப்போடு டெங்கு இல்லாத மாவட்டமாக பெரம்பலூரை மாற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகின்றது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள், தனியார் கல்வி நிறுவன ஊழியர்கள் உடன் இருந்தனர்.