Perambalur District DMK 1000 liters of Kapasura drinking water for 10 thousand people on behalf of!

 

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, எலுமிச்சை, இஞ்சி, மிளகு, மல்லித்தூள், கொத்தமல்லி, பெருங்காயம், மஞ்சள் ஆகியவற்றைக் கொண்டு, மாவட்ட கழக அலுவலகத்தில் கட்டுமரம் ஓட்டல் உரிமையாளர் சசிக்குமார் தலைமையில் 25 பேர் கொண்ட குழு இன்று அதிகாலை முதல் தயாரிக்கப்பட்ட கபசுர குடிநீர், பெரம்பலூர் மாவட்ட தி.மு.க சார்பில், பொதுமக்கள் 10 ஆயிரம் பேருக்கு, ஆயிரம் லிட்டர் கபசுரக் குடிநீர் ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை, பெரம்பலூர் ஆகிய ஒன்றியங்களில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் வழங்கிடும் வகையில், ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகளிடம், மாவட்ட கழகச் செயலாளரும் – மாவட்ட ஊராட்சி குழு தலைவருமான குன்னம் சி. இராஜேந்திரன் வழங்கினார்.

இந்த கபசுர குடிநீர் தினமும் தயாரித்து வழங்கும் நிகழ்ச்சி தினமும் தொடர்ந்து நடைபெற வேண்டும் என துணைப் பொதுச்செயலாளர் ஆ. இராசா. எம். பி., கூறியதின் அடிப்படையில் தினமும் இதேபோல் வழங்கி முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் பா.துரைசாமி, டாக்டர் செ.வல்லபன், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என். ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் எஸ்.அண்ணாதுரை, வீ.ஜெகதீசன், எஸ்.நல்லதம்பி, சி. ராஜேந்திரன், நகர செயலாளர் எம். பிரபாகரன், மாவட்ட அவைத்தலைவர் அ. நடராஜன், மாவட்ட பொருளாளர் செ.இரவிச்சந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!