Perambalur District DMK Executive Committee Meeting! District DMK In-charge V. Jagatheesan’s Report!
பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் வருத் 24.11.2024,(ஞாயிற்றுக்கிழமை) மாலை 3.00 மணியளவில், மாவட்ட அவைத்தலைவர் அ.நடராஜன் தலைமையில், பாலக்கரையில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில், பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், கே.என்.அருண்நேரு.எம்.பி., சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் நடக்க உள்ளது.
இந்த கூட்டத்தில், திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா. எம்.பி – போக்குவரத்துத்துறை அமைச்சர் .சி.சிவசங்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர். இதில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் தங்க.சித்தார்த்,
குன்னம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் ஏ.கே.அருண் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
அது சமயம், மாநில நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள்,மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
வருகிற 27.11.2024-அன்று மாநில இளைஞர் அணி செயலாளரம், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழா குறித்தும், 23.11.2024,24.11.2024-ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் மற்றும்
கட்சி ஆக்கப்பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளார்.