Perambalur: District lawyers boycott court!

பெரம்பலூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழுவின் அவசர கூட்டத்தில், சங்க தலைவர் இ. வள்ளுவன் நம்பி தலைமையில் எடுக்கப்பட்ட முடிவின்படி, புதுடெல்லியில் நீட் தேர்வு முறைகேட்டினை கண்டித்து நடந்த மாணவர்களின் போராட்டத்தில் தடியடி நடத்தி பொய் வழக்கு போட்டதை வன்மையாக கண்டிப்பதுடன் பொய் வழக்கினை திரும்ப பெற வலியுறுத்தி இன்று ஒரு நாள், பெரம்பலூர், குன்னம், வேப்பந்தட்டை உள்ளிட்ட மாவட்ட நீதிமன்றங்களில், நீதிமன்றப் பணிகளை புறக்கணித்தனர். இதனால், நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டது. இதில், சங்கத் தலைவர் இ.வள்ளுவன் நம்பி, செயலாளர் வி.சேகர், பொருளாளர் பி.சிவராமன் உள்ளிட்ட நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!