Perambalur: District PMK holds general committee meeting to explain Chithirai Nilavu Youth Festival!
வரும் மே மாதம் 11ம் நாள் மகாபலிபுரத்தில் வன்னியர் சங்கம் சார்பில் நடைபெறும் சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழா மாநாடு குறித்து பெரம்பலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் சார்பில் பாமக மாவட்ட செயலாளர் க.செந்தில்குமார் தலைமையில் நடந்தது. பொதுக்குழு உறுப்பினர் அனுக்கூர் ராஜேந்திரன். செயற்குழு உறுப்பினர் கண்ணபிரான். முன்னாள் மாவட்ட செயலாளர் உலக .சாமிதுரை, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன். அரியலூர் பெரம்பலூர்ர் அமைப்பு தலைவர் வழக்கறிஞர் தங்கதுரை. மாவட்ட பொருளாளர் அம்சவள்ளி, மாவட்ட அமைப்பு தலைவர் மருதவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுக்குழு கூட்டம் பெரம்பலூர் நான்கு ரோடு செல்லும் வழியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது.
இதில் சிறப்பு அழைப்பாளராக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் ஸ்டீல் சதாசிவம், வன்னியர் சங்கம் மாநில செயலாளர் க.வைத்தி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது வைத்தி பேசியதாவது: வருகின்ற மே 11 தேதி வன்னியர் சங்கம் சார்பில் நடைபெறும் சித்திரை முழு நிறைவு மாநாடு 12 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் இந்த மாநாட்டின் நோக்கம் அனைத்து சமுதாய மக்களின் நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும், சாதி வாரியாக கணக்கெடுக்க வேண்டும், அந்தந்த சமுதாயத்திற்கு கொடுக்க வேண்டிய உரிமைகளை கொடுக்க வேண்டும், பாட்டாளி மக்கள் கட்சியை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும், கிராமம் தோறும் வாக்களர்களை உருவாக்க வேண்டும், அனைத்து உறுப்பினர்களும் வீடு வீடாக சென்று துண்டறிக்கை கொடுத்து மக்களை பெருமளவில் திரட்டி மாநாட்டை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மேலும், நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி தலைவர் செல்வகுமார் .மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் வீரமுத்து..மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி .பசுமைத்தாயகம் பொறுப்பாளர் செல்வ கடுங்கோ, நகர செயலாளர் இமயவம்பன், அ.மேட்டூர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும், நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் பாட்டாளி மக்கள் கட்சி, மற்றும் வன்னியர் சங்கம் , நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்