அ.தி.மு.க. பொதுச்செயலாளர், முதல்– அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:–
பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரனின் தந்தை ராமலிங்கம் உடல் நலக்குறைவால் மரண மடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.
தந்தையை இழந்து வாடும் அன்புச் சகோதரர் ராமச்சந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.