Perambalur District Stakeholder Consultation Meeting for the Preparation of the Tiruchirappalli Zonal Plan!

மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தின் சார்பில் திருச்சிராப்பள்ளி மண்டல திட்டத்தினை தயாரிப்பதற்கான பெரம்பலூர் மாவட்ட பங்குதாரர்கள் (Stakeholder Meeting) கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் கிரேஸ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில்,

நகர் ஊரமைப்பு இயக்கத்தின் சார்பில் மண்டல திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றது. மண்டல திட்டங்கள் என்பது நிலையான பகுப்பாய்வு முறைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இடவியல் திட்டங்கள் ஆகும். இவை நிலவியல், காலநிலை, சுற்றுச்சூழல், சமூக-பொருளாதார, மக்கள் தொகை, உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து தொடர்பான தரவுகளின் போக்குகளை பகுப்பாய்வு செய்து உருவாக்கப்படும்.

தொற்று நிலையாக்கம், நகர்மயமாக்கம், சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் தாங்கல் திறன், உள்கட்டமைப்பு போதுமானம், அணுகல் வசதி, தனிமைப்படுத்தல், எதிர்ப்பு மற்றும் உட்சேர்க்கை ஆகிய முக்கியக் கொள்கைகள் மண்டலத் திட்டத்தில் சரிசமமாக ஒருங்கிணைக்கப்படுகின்றன. திருச்சிராப்பள்ளி மண்டலத் திட்டம் புவியியல் தகவல் முறை (GIS), செயற்கைக்கோளின் படங்கள் மற்றும் மண், நீர், நிலப்பரப்பு மற்றும் உள்கட்டமைப்பு தொடர்பான பல்வேறு அறிவியல் தரவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தின் அனைத்து துறை அலுவலர்களும் இந்தத் திட்டத்தின் பகுப்பாய்வு செயல்முறை பற்றியும், பயன்படுத்தக்கூடிய தரவுகள் மற்றும் முன்பார்வை திட்டமிடல் தொடர்பான தகவல்களை மாவட்ட நகர் ஊரமைப்புத்துறையினருக்கு வழங்கிட வேண்டும். மண்டலத் திட்டத்தின் பல்வேறு துறைகளுக்கான எதிர்கால திட்டமிடலின் நோக்கங்களை வலியுறுத்தவும் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்துத்துறை அலுவலர்களிடமிருந்தும் தொகுக்கப்படும் தரவுகளின் அடிப்படையில் திருச்சிராப்பள்ளி மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களுக்கான திட்டங்களை தாயாரித்தல் -2047 என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

எனவே, அனைத்துத்துறை அலுவலர்களும் தங்கள் துறைசார்ந்த தகவல்களை வழங்கப்பட்டுள்ள உரிய படிவத்தில் பூர்த்தி செய்து மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக துணை இயக்குநரிடம் வழங்கிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட நகர் ஊரமைப்புத்துறை துணை இயக்குநர் ஸ்ரீதர், நகராட்சி ஆணையர் ராமர், விஜயவாடாவில் இயங்கி வரும் அரசுத் துறை நிறுவனமான திட்டமிடல் மற்றும் கட்டடக் கலைத் துறையின் ஒருங்கிணைப்பாளர் வள்ளியப்பன் மற்றும் அனைத்துத் துறைகளின் முதல்நிலை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!