Perambalur: DMK Candidate Dr. Jayalakshmi Canvasses for Votes Among Agricultural Workers, Wielding a Weeding Hoe!

பெரம்பலூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் டாக்டர் ஜெயலட்சுமி, ஆலத்துர் மேற்கு ஒன்றியத்தில் திமுக உள்ளிட்ட தோழமை கட்சிகளுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொட்டியப்பட்டியில் மரவள்ளி கிழங்கிற்கு பெண் தொழிலாளர்கள் களை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களிடம் வாக்குகள் சேகரித்த வேட்பாளர் ஜெயலட்சுமி அவரும், களை வெட்டி காட்டி மருத்துவராக இருந்தாலும், பள்ளி பருவக் காலங்களில் விவசாய பணிகளை செய்தவர்தான் என வாக்குகளை சேகரித்தார்.
2026 -ல் வாக்களித்து வெற்றி பெற செய்தால், கலைஞர் மகளிர் உரிமை தொகை இனி மாதம் ரூ.2000/- வழங்கப்படும். மகளிருக்கு ரூ.8000/- மதிப்பிலான இல்லத்தரசி கூப்பன் வழங்கப்படும். அரசு மருத்துவக் காப்பீட்டு திட்டம் ரூ.10 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சை. முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் 8ம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும். 2003 ஆம் ஆண்டுக்கு பிறகு பணியில் சோர்ந்த அரசு ஊழியருக்கு புதிய பென்சன் திட்டம் செயல்படுத்தப்படும். நெல் மற்றும் கரும்பு குவிண்டால் & டன் ஒன்றுக்கு கொள்முதல் விலை ரூ.3500/- & ரூ.4500/- ஆக உயர்த்தப்படும். முதியோர், கைம்பெண் மற்றும் 50+ வயதுத் திருமணமாகாத மகளிருக்கு ஓய்யூதியம் ரூ.2,000 ஆக வழங்கப்படும். மாற்றுதிறனாளிகள் உதவித்தொகை ரூ.2500 ஆக உயர்வு. கலைஞரின் கனவு இல்லம், பல்வேறு திட்டங்களின்கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 10 லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். இலவச மின்சாரம் பெறும் விவசாயிகளுக்கு மீட்டர் பொருத்தப்படாத விலையில்லா புதிய நவீன மின்சாரப் பம்பு செட்டுகள் வழங்கப்படும். 35 இலட்சம் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும்.
5 ஆண்டுகளில் 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் மாவட்டந்தோறும் குறைந்தபட்சம் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி. சுய உதவிக்குழு உறுப்பினராக இருக்கும் பெண்களுக்கு பிணை ஏதுவுமின்றி ரூ.5 இலட்சம் வரை மானியத்துடன் வங்கி கடனுதவி வழங்கப்படும் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்து வாக்குகளை சேகரித்தனர்.
நத்தக்காடு, தேனூர், தொட்டியபட்டி, கண்ணப்பாடி, து.களத்தூர், எலந்தலப்பட்டி, அடைக்கம்பட்டி, நக்கசேலம், புது அம்மாபாளையம், ஈச்சம்பட்டி, பழைய விராலிப்பட்டி, புது விராலிப்பட்டி, சிறுவயலூர், மங்கூன், குரூர், செட்டிக்குளம், மாவிலிங்கை, செட்டிகுளம், நாட்டார் மங்கலம், கூத்தனூர் உள்ளிட்ட கிராமங்களில் கொளுத்தும் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் மதசார்பற்ற கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வாக்கு சேகரிக்க சென்ற டாக்டர் ஜெயலட்சுமிக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும், வெற்றித் திலகமிட்டு வாழ்த்தினர். பட்டாசுகள், வேட்டுகள் முழங்க வரவேற்றனர்.
ஆலத்தூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் டாக்டர் வல்லபன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆர்.அருண், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ராஜேந்திரன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஜெயசீலன், தி.க. மாவட்ட தலைவர் தங்கராசு, உழைக்கும் விவசாய தொழிலாளர் தலைவர் ஈஸ்வரன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் எம்.மணிவாசகம், தொமுச கே.கே. குமார், வக்கீல் மதுபாலன், அம்பேத்கர் உள்ளிட்ட பலர் உடன் சென்றிருந்தனர்.








kaalaimalar2@gmail.com |
9003770497