Perambalur DMK candidate in support of Prabhakaran, A.Raja collected votes Campaign!


பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில், பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் பிரபாகரனை ஆதரித்து, அக்கட்யின் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.இராசா எம்.பி பேசியதாவது:

தமிழக பல்கலைக்கழகங்களில் 23 துணைவேந்தர்களை கவர்னர் நியமனம் செய்கிறார். தமிழகத்தில் படித்தவர்கள் இல்லையா, குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்து
சிறுபான்மை மக்களுக்கு துரோகம் செய்தவர் எடப்பாடி. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேர் 30 ஆண்டுகளாக ஏன் விடுதலை செய்யவில்லை.
மத்திய வேளாண்மை சட்டம், நீட், ஜி.எஸ்.டி, எட்டு வழிச் சாலை திட்டம், உதய் மின் திட்டம், என்று எல்லாமே கார்ப்பரேட் கம்பெணிக்கு எடப்பாடி தாரை வார்த்து விட்டார்.
பெரம்பலூர் மக்களுக்கு நோய் வராதா, அ.தி.மு.க. வினருக்கு நோய் வராதா தமிழகத்திற்கு 10 மருத்துவக்கல்லூரி கொண்டு வந்தோம் என்று எடப்பாடி சாதனையாக சொல்கிறார்.

பெரம்பலூர் அரசு மருத்துவக் கல்லூரி திட்டத்திற்கு கலைஞர் அவர்கள் ரூ.85 கோடி நிதி ஒதுக்கினார். ராஜாவாகிய நான் நிலம் வழங்கிய அந்த ஒரே காரணத்திற்காக அந்த திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டார்கள். உலக வங்கி 80 சதவீத நிதி வழங்குகிறது. அந்தந்த மாநில அரசுகள் 20 சதவீத நிதியை வழங்கி அந்த மருத்துவ கல்லூரி திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

அரசு மருத்துவக்கல்லூரி ஏன் கொண்டு வரவில்லை, இப்படி பொய் புனைசுருட்டு எல்லாமே பொய் இப்படி ஒரு மோசமான ஆட்சியை இந்த முறை தூக்கி எறிய வேண்டும் என்றால் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். இந்தியா முழுவதும் 100 மருத்துவக் கல்லூரிகள் கொடுக்கப்பட்டது. இந்திய வளர்கின்ற நாடு, கேன்சர், அந்த நாட்டில் டி.பி. அதிகமாக இருக்கிறது. விபத்துகள் அதிகமாக நடைபெறுகிறது. அதற்காக உலக வங்கி தமிழகத்தில் மருத்துவக்கல்லூரிகள் அமைக்க நித
வேண்டுமென்றே பெரம்பலூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.டி. ராமச்சந்திரன் மற்றும் இளம்பை. தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரிடம் கேட்கிறேன், உங்களுக்கு வெட்கமாக இல்லையா,இரட்டை இலைக்கு எப்படி ஓட்டு கேட்டு வருகிறீர்கள்!

1996ல் ரஜினிகாந்த் சொன்னார் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் இந்த நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று, எனக்கு ஆண்டவன் மீது நம்பிக்கை கிடையாது. உங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. உங்களை நம்புகிறேன், இந்த தடவை ஆட்சி மாறவில்லை என்றால், தமிழகம் ஒரேடியாக முடிந்துவிடும். அதற்காக உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி வரவேண்டும், என பேசினார். அப்போது முன்னாள் எம்.எல்.ஏக்கள் ம.ராஜ்குமார், துரைசாமி, திமுக மாவட்ட செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன், வக்கீல் ராஜேந்திரன், பசும்பலூர் ஜெயபால், ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, உள்ளிட்ட பல முக்கிய கட்சி பிரமுகர்களும், கூட்டணி கட்சியை சேர்ந்த பிரமுகர்களும் திரளாக கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!