Perambalur: DMK holds public meeting to condemn Modi government! Statement by District DMK in-charge Jagadeesan!
பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.சார்பில், மத்திய பா.ஜ.க.மோடி அரசைக் கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது. இது குறித்து பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கையாவது:
தலைமை திமுக ஆணைக்கினங்க, திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி., அறிவுறுத்தல்படி, போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆலோசனைக்கினங்க, ஓரவஞ்சனையான நிதிப்பகிர்வு, தமிழ்நாட்டின் முக்கிய திட்டங்கள் புறக்கணிப்பு, தமிழ்நாடு முதலமைச்சரின் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்குப் பிறகும் எஸ்.எஸ்.ஏ. பேரிடர் மேலாண்மை ஆகிவற்றிற்கு நிதி ஒதுக்காதது, ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரைக் கூட உச்சரிக்காதது எனத் தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடி அரசைக் கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன்(எனது) தலைமையில் பெரம்பலூர் மாவட்டம் ,குன்னம் கலைஞர் திடலில், 08.02.2025,(சனிக்கிழமை), மாலை 6.00 மணிக்கு நடக்கிறது. அதில், கோவி.லெனின் – கவிஞர்.சல்மா கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர். இதில் கே.என்.அருண்நேரு.எம்.பி., எம்.எல்.ஏ பிரபாகரன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்த கண்டன பொதுக் கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர,பேரூர் திமுக செயலாளர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், மகளிரணியினர், உள்ளாட்சி பிரதிநிதிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், வார்டு, கிளைக் கழக செயலாளர்கள்,கழக பிரமுகர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.