Perambalur: DMK Student Wing protests against the central government imposing Hindi on the three-language policy!
பெரம்பலூர் மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில், மும்மொழி கொள்கை எனும் பெயரில் இந்தியை திணிக்கும் மத்திய அரசைக் கண்டித்து தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மாணவரணி அமைப்பாளர் தங்க.கமல் தலைமையில் நடந்தது. இதில் தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் சன்.சம்பத், ம.தி.மு.க.மாவட்ட செயலாளர் ஜெயசீலன், தி.க மாவட்ட தலைவர் தங்கராசு, வி.சி.க மாநில விவசாய அணி செயலாளர் வீர. செங்கோலன், வி.சி.க மாவட்ட செயலாளர் ரத்தினவேல், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர், ஆலத்தூர் மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் செ.வல்லபன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் பா.ரினோபாஸ்டின், ராகவி, கிருஷ்ணா, தெரணி. இளையராஜா, தமிழ்வேந்தன் மற்றும் கல்லூரி பெருமன்றம் சார்பில் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கோ பேக் மோடி, கெட் அவுட் மோடி, செட் அப் மோடி உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பினர்.