Perambalur: Doctor Killed After Being Struck by Lightning-Fast Race Bike! Police Investigation Underway.

பெரம்பலூர் நகரில் அதிவேக ரேஸ் பைக் மோதியதில் டாக்டர் தலையில் பலத்த காயத்துடன், கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தை சேர்ந்தவர் டாக்டர் த.குணசேகரன். தஞ்சாவூர் மாவட்ட அரசு சித்த மருத்துவ அலுவராகராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் இன்று காலை பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் மதராசா சாலை இணைப்பு சாலையில் வந்தவர் தனது ஸ்கூட்டரில், ஆத்தூர் பெரம்பலூர் சாலையில் காமராஜர் வளைவு நோக்கி செல்ல முயன்றார். அப்போது, ஆத்தூர் – பெரம்பலூர் சாலையில் இரண்டு வாலிபர்கள் ஓட்டி வந்த டியூக் ரேஸ் பைக் சித்தா டாக்டர் சென்ற ஸ்கூட்டி மீது மோதி விபத்திற்குள்ளனாது. இதில் டாக்டர் தூக்கி வீசப்பட்டார். அவரது கால் ஒன்று முறிந்ததுடன், தலையில் பலத்த காயமடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் அவரை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு போய் சேர்த்தனர். சிகிச்சையின் போது டாக்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்ததுடன், ரேஸ் பைக் ஓட்டி வந்த இரு வாலிபர்களிடமும் விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் இரண்டு பேரும், சோமண்டாபுதூரை சேர்ந்த பிரதீப்ராஜா, பெரியசாமி என்பதும், பீரதீப்ராஜா பைக் ஓட்டிவந்ததும் தெரியவந்துள்ளது. இன்று காலை நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், பெரம்பலூர் நகருக்குள் தறி கெட்ட குதிரைகளாக ரேஸ் பைக்குகள் சைலன்ஸர் மாற்றப்பட்டு, அதிக சத்தத்தை அலறவிட்டபடியே மின்னல் வேகத்தில் செல்கின்றனர். இதனால்,மற்ற வாகன ஓட்டிகள், பெண்கள், வயதானவர்கள் சாலையில் செல்லும் போது மிரள்வதுடன் விபத்துகளில் சிக்குகின்றனர். அதிவேகமாக நகர் பகுதிக்குள் செல்லும் ரேஸ் பைக்குகளை பறிமுதல் செய்து, தடுக்க வேண்டும் என காவல்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!