Perambalur: Don’t believe the sensationalist portrayals; The person who died at Roever Goat Farm died of a heart attack; Police statement!
கடகடககடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம் கீழ்செருவாய் கிராமத்தை சேர்ந்த தங்கதுரை (43) இவர் பெரம்பலூர் தண்ணீர் பந்தல் பகுதியில் ரோவர் கல்லூரிக்கு சொந்தமான ஆட்டுப்பண்ணையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த மார்ச் 2 ம் தேதி வேலைக்கு வந்தவர் நெஞ்சு வலி என்று கூறியதால் கல்லூரி வாகனத்தில் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக, பெரம்பலூர் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில், தங்கதுரை மாரடைப்பால் தான் இறந்து விட்டதாக மருத்துவர்கள் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த சம்பவத்தை சிலர் ரோவர் கல்லூரி நிர்வாகத்தினர் தற்கொலைக்கு தூண்டியதாகவும், அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும் தவறாக சித்தரித்து செய்திகளை பரப்பி வருகின்றனர். வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். மாவட்ட காவல்துறை சட்டப்படியான நடவடிக்கை எடுத்து வருகின்றது, என போலீஸ் இன்று காலை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக இறந்தவரின் உறவினர்கள், உள்பட ஒரு கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ரோவர் நிறுவனம் பணியாட்களுக்கு காப்பீடு ஏதாவது செய்திருந்தால், அதன் மூலமாகவோ, அல்லது சொந்த நிதியில் இருந்தாவது இறந்த குடும்பத்தினருக்கு ஏதாவது ஒரு சிறிய இழப்பீட்டை மனித நேயத்துடன் வழங்கி தொடர் போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கலாம் என சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.