Perambalur: Don’t sell your priceless votes for 35 paise per day; TVK female candidate Revathi campaigns!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதியில் தவெக வேட்பாளராக களமிறங்கி இருக்கும் வேட்பாளர் ரேவதி, தனது கட்சி தொண்டர்களுடன் தேர்தல் களத்தில் வாக்குகளை சேகரித்து வருகிறார். செல்லும் இடங்களில் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஆராத்தி எடுத்து சிறப்பு வரவேற்பு கொடுத்து அமர்க்ளப்படுத்துகின்றனர். இவருக்கு சொந்த ஊர் குன்னம் தொகுதியில் ஆய்குடி. வேட்பளார் ரேவதி வாக்குசேகரிக்கும் செல்லும் இடமெல்லாம் சாமானிய மக்களுடன் ஒருவராக வாக்குகளை சேகரித்து வருகிறார். நேற்று கோவில்பாளையம் அண்ணா நகரில் நடந்த பிரச்சாரம் மேடையில் மேளம் வாசித்து வாக்குகளை சேகரித்தார்.

இன்று அழகிரிபாளையம், வரிசைப்பட்டி, கீழமாத்தூர், மங்கலம உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் தனது கட்சியினருடன் வாக்குகளை சேகரித்தார். அப்போது, வாக்காளர்களிடம் அவர் பேசியதாவது: விலைமதிப்பில்லாத உங்கள் வாக்கை ரூ. 500 க்கோ, ஆயிரத்திற்கோ விற்றுவிடாதீர்கள். 5 ஆண்டுக்கு ரூ. 500 என்றால் உங்களுக்கு நாள் ஒன்றுக்கு கிடைப்பது வெறும் 35 பைசாதான். ஆயிரம் என்றால் 70 பைசா வரும். இதை வைத்து தீப்பெட்டி கூட வாங்க முடியாது. உங்கள் பொன்னான வாக்குகளை உங்கள் தலைமுறை வாழ!, நீங்கள் வாழ!! பணம் வாங்கமல் ஓட்டு போட்டு சிறந்த வேட்பாளரை தேர்வு செய்யுங்கள். சிந்தித்து பார்த்து வாக்களியுங்கள் என அவரது விசில் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.

புதிய கட்சி, முதல் தலை வேட்பாளர், தேர்தல் அனுபவம் இல்லாத தொண்டர்களை வைத்துக் கொண்டு தனி ஒரு பெண்ணாக களமாடி வருகிறார். கடந்த சில நாட்களாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள இவருக்கு தொண்டர்களை தவிர யாருடைய துணையும் இல்லாமல் தொடர்ந்து பிரச்சாத்தில் ஈடுபடும் இவருக்கு பல இடங்களில் மாலை, இரவு நேரங்களில் மின்சாரம் தடைபடுவதாககவும் தெரிவிக்கும், இவர் தொய்வில்லாமல் இளம் தொண்டர்களின் விசில் சத்தத்துடன் விசில் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து வருகிறார். இவருடைய வாக்கு சேகரிப்பே திமுக மற்றும் அதிமுக வெற்றி நிர்ணயிக்கும் வாய்ப்பு வரலாம்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!