Perambalur: Dr. Jayalakshmi Announced as DMK Candidate! A Female Candidate After Many Years—Women Rejoice!

பெரம்பலூர் தனித் தொகுதிக்கு திமுக சார்பில் வேட்பாளராக டாக்டர் எஸ்.டி. ஜெயலட்சுமி கருணாகரனை அக்கட்சி இன்று அறிவித்துள்ளது. MBBS டாக்டரான இவருக்கு வயது (50). இவரது கணவர் கருணாகரனும் மருத்துவ நிபுணர். வேட்பாளரின் தந்தை தங்கராசு ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், முற்போக்கு சிந்தனையாளர். இவரது தாயார் சரோஜினி தங்கராசு. 1984 ல் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டார். பின்னர். அவர், கடந்த 1986 -முதல் 1996 வரை ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளராகவும், 1996 முதல் 2014 வரை பெரம்பலூர் மாவட்ட மகளிரணி அமைப்பாளராகவும் பொறுப்பு வகித்தார்.

டாக்டர் ஜெயலட்சுமி – கருணாகரன் இருவரும் சுமார் 25 ஆண்டுகளாக பெரம்பலூர் நகரில் மருத்துவ சேவை அளித்து வருகின்றனர். 2024 ஆம் ஆண்டு முதல் பெரம்பலூர் மாவட்ட திமுக மருத்துவர் அணி தலைவராக உள்ளார். 2020 – 24 வரை பெரம்பலூர் மாவட்ட மருத்துவர் அணி துணை அமைப்பாளராக பொறுப்புகளை வகித்து வந்தார். இவரது தங்க செந்தமிழ் செல்வியும் சித்த மருத்துவராக உள்ளார். செந்தமிழ்செல்வியின் கணவர் விஜயனும் சித்த மருத்துவராக உள்ளார். ஜெயலட்சுமியின் அண்ணன் அம்பேத்கார் என்பவரும் உடன் உள்ளார். மகன் ஜெ.க. நிருபன்கார்த்திக்,
மகள்: ஜெ.க. யாழினி இருவரும் எம்.பி.பி.எஸ் டாக்டர்களாக படித்துக்கொண்டு உள்ளனர்.

அரசு பள்ளியில் படித்து மருத்துவரான ஜெயலட்சுமியின் சொந்த ஊரான எசனை மக்கள் பெரும் மகிழச்சியுடன் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். நீண்ட ஆண்டுகளுக்கு பின்பு பெரம்பலூர் மாவட்டத்தில் பெண் ஒருவர் வேட்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளதால் திமுக சேர்ந்த பெண்கள் மட்டும் அல்லாது தொகுதியில் உள்ள அனைத்து பெண்களும் மகிழச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!