Perambalur: Drunk lawyers involved in a ruckus at the police station: Public suffers greatly! Video goes viral!
பெரம்பலூர் அருகே உள்ளது மங்களமேடு போலீஸ் ஸ்டேசன். இன்று மதியம் பெரம்பலூரை சேர்ந்த 2 வக்கீல்கள் அவர்களது கட்சிக்காரருடன் போலீஸ் ஸ்டேசன் சென்றனர். 3 பேரும், அங்கு பணியில் இருந்த பெண் போலீசுடன் பேசத் தொடங்கினர். அவர்கள் அளவிற்கு அதிகமாக அருந்திருந்த மதுவின் நெடி போலீஸ் ஸ்டேசன் முழுவதும் வீசியது. அங்கு பிற அலுவல்களுக்காக வந்திருந்த பெண்கள், ஆண்கள் முகம் சுளிக்கத் தொடங்கினர். அங்கிருந்த பெண் போலீசார் மதுவின் நெடி தாங்க முடியவில்லை, உங்கள் வாதியின் மனு விசாரிக்கும் போலீசார் லப்பைக்குடிக்காட்டில் நடக்கும் அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் கலந்து கொள்வதால், அங்கு, பாதுகாப்பு பணிக்கு சென்றிருக்கின்றனர். சற்று நேரத்தில் நிகழ்ச்சி முடிந்து விடும். அவர்கள் வந்த உடன் விசாரிப்போம், சற்று நேரம் காத்திருங்கள் எனக் கூறினார். அதற்கு, வந்த வக்கீல்களில் ஒருவர் போதையில் ஸ்டேசன் உங்க வீடா, அப்பன் வீட்டு சொத்தா, என தரக்குறைவாகவும், அநாகரீகமான வார்த்தைகளால் கடுமையாக போலீசாரை நோக்கி திட்டினார். அங்கிருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தியும், கேட்காத அவர், போலீஸ் ஸ்டேசனில் இருந்த பொருட்களை தூக்கி வீசினார். பின்னர், நான் யார் தெரியுமா? என சவால் விட்டு, உங்களை சஸ்பெண்ட் செய்ய எங்க வக்கீல் சங்கம் மூலம் பாய்காட் செய்வோம். போனை போடு என ரகளையில் ஈடுபட்டதோடு , ஸ்டேசனுக்குள் தாண்டவம் ஆடினார்.
போதையில், இருந்த மற்ற ஒரு வக்கீலும், வாதியும் போலீஸ்காரர்களை சரமாரியாக திட்டினர். உங்கள் எல்லையில் உள்ள தென்றல் கடையில்தான் கள்ளச்சாரயம் வாங்கி குடித்தோம். என்ன பண்ண முடியும்.? நீங்கள் மாமூல் வாங்கி கொண்டு கள்ளச்சாராயம் விற்க செய்கிறீர்கள் அதனால்தான் குடிக்கிறோம் என கத்தினர். போலீசார் பின்வாங்கியதை கண்டதை அங்கு அலுவல்களுக்காக வந்த பொதுமக்கள் போதையில் இருந்த வக்கீல்களை சமாதானப்படுத்தியும், கேட்காமல் பொதுமக்களையும் மிரட்டத் தொடங்கினர். என்ன செய்து வீடுவீர்கள் போதையில் தான் இருக்கிறோம், முடிந்தால் கேஸ் போடு பார்க்கலாம், சங்கம் எங்கள் துணைக்கு இருக்கும் என அறைகூவல் விடுத்தனர். பொதுமக்கள் எவ்வளவோ எடுத்துக் கூறியும், போதையில் இருந்த வக்கீல்களுடன் வந்த வாதியும் போதையில் சகட்டு மேனிக்கு திட்டத் தொடங்கினர். அருவருப்பான வார்த்தைகளை கேட்ட பொதுமக்கள் வக்கீல்கள் என்றால் இப்படியுமா இருப்பார்கள் என நொந்து கொண்டனர்.
போதை வக்கீல்களால் போலீஸ் ஸ்டேசனே அதிர்ந்தது. அங்கிருந்த எஸ்.எஸ்.ஐ ஒருவர் ஓடி ஓடி ஒளிய ஆரம்பித்தார். போதையில் வக்கீல் அவருக்கு கட்டாயம் விளக்கத்து அளித்து ஆபசமாக பேசினார். சுமார் ஒன்றரை மணி நேரம் போதை வக்கீல்களால், போலீஸ் ஸ்டேசனுக்கு வந்த பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.
வக்கீல் சங்கங்கள், நீதி மன்றங்கள் இது போன்ற போதை வக்கீல்களுக்கு துணை போகாமல், உரிய ஆலோசனைகள் வழங்கி வக்கீல் தொழிலின் மேன்மையும் மாண்பையும் காக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்திய சுதந்திர போராட்டத்தில் அதிகம் போராடியதில் வக்கீல்களுக்கும் பெரும் பங்கு உண்டு, காந்தி, நேரு, வ.உ.சி, அம்பேத்கர் உள்ளிட்டோர்களும் வக்கீல்களே!