Perambalur: Due to a shortage of laborers, paddy stocked by farmers for sale has sprouted in the summer rains! Demand raised for compensation.

பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. அங்கு விவசாயிகள் விற்பனைக்கு குவித்து வைத்திருந்த ஆயிரக்கணக்கான சிப்பம் நெல் மூட்டைகள் கடந்த 2 நாட்களுக்கு முன் பெய்த மழை மற்றும் நேற்றிரவு பெய்த பலத்த மழை காரணமாக நனைந்தன. நனைந்த மூட்டைகள் ஈரத்தின் காரணமாக முளைத்து சேதமடைந்தன.
கொள்முதல் செய்ய போதிய ஆட்கள் இல்லாதால் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். கடந்த 15 நாட்களாக முன்பு கொட்டப்பட்ட நெல்லை உரிய காலத்தில் கொள்முதல் செய்யாமல் காலதாமதம் செய்ததின் காரணமாக தீடீர் தொடர் கோடை மழையில் நெல்மணிகள் நனைந்து முளைத்ததால் விவசாயிகள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். மாவட்ட கலெக்டர் இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.









kaalaimalar2@gmail.com |
9003770497