Perambalur: Elderly pedestrian killed after being hit by crane! Police investigating!
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே கிரேன் மோதி முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
புதுக்குறிச்சி தெற்கு தெருவை சேர்ந்த முத்துசாமி (வயது 65). இவர் இன்று காலை தனது வீட்டிலிருந்து காரை செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கிரேன் ஒன்று முத்துசாமி மீது மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். இது குறித்து, தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் சடலத்தை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.