பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக செய்திக்குறிப்பு:
இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி பெரம்பலூர் மாவட்டத்தில் 2016 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணி தொடர்பாக அந்தந்த வாக்குசாவடிகள் அளவில் வாக்காளர்கள் தங்களது பெயர் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண் ஆகியவை ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவாகி உள்ளதை கண்டறிந்து நீக்கம் செய்யவும், தங்களது உறவினர்களின் இறப்பு தொடர்பான தகவல்களை வாக்குசாவடி நிலைய அலுவலரிடம் அளித்து அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யவும் சிறப்பு முகாம்கள் பிப்15 முதல் பிப்.29 வரை நடைபெற உள்ளது.
இந்த சிறப்பு முகாம்களில் வாக்காளர்கள் தங்களது பெயர் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண் ஆகியவை ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவாகி உள்ளதை கண்டறிந்து நீக்கம் செய்யவும் மற்றும் தங்களது உறவினர்கள் இறப்பு தொடர்பான தகவல்களை வாக்குசாவடி நிலைய அலுவலரிடம் அளித்து அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், அங்கீகரீக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகவர்கள் அந்தந்த வாக்குசாவடி நிலைய அலுவலர்களுடன் இணைந்து அப்பகுதியிலுள்ள வாக்காளர் பெயர் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண் ஆகியவை ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவாகி உள்ளதை கண்டறிந்து நீக்கம் செய்யவும் மற்றும் அப்பகுதியில் இறந்தவர்கள் தொடர்பான தகவல்களை அளித்து அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், என மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.