Perambalur: Electricity Board announces special camp for electricity consumers in Ariyalur and Perambalur divisions to lodge complaints directly!
வரும் 05.04.2025 அன்று காலை 11.00 மணி முதல் மாலை 05.00 வரை கோட்ட அளவில் மின் கட்டணம் தொடர்பான புகார்கள், பழுதான மின்னளவி மாற்றுவது தொடர்பான புகார்கள் மற்றும் குறைந்த மின்னழுத்தம் தொடர்பான புகார்களை மின் நுகர்வோர்கள் நேரடியாக மின்சார வாரியத்திடம் தெரிவிப்பதற்கு ஏதுவாக அரியலூர் மற்றும் பெரம்பலூர் கோட்ட அலுவலகங்களில் “ஒருநாள் சிறப்பு முகாம்” நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, மின் நுகர்வோர்கள் தங்களின் குறைகளை சிறப்பு முகாமில் தெரிவித்து சரி செய்து கொள்ள, பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் வீ. மேகலா தெரிவித்துள்ளார்.