Perambalur: Electricity usage in violation of rules; Company refuses to pay Rs. 21 lakh fine, says law; Officials disconnect electricity connection!

பெரம்பலூர் நகரில் இயங்கி வரும் நிறுவனம் ஒன்று மின் இணைப்பை மின்வாரிய சட்ட விதிகளை மீறி அதற்கு புறம்பாக மின்சாரத்தை பயன்படுத்தி வருவதை மின்வாரிய அதிகாரிகள் கண்டுபிடித்தனர். கண்டுப்பிடித்த மின்வாரியத்தினர் முறையான அனுமதி பெற்று மின்சாரத்தை பயன்படுத்திக் கொள்ளவும், இனி முறைகேடாக பயன்படுத்தக் கூடாது என கண்டித்ததுடன், கடந்த 2017 ஆண்டு முதல் முறைகேடாக அளவிற்கு அதிகமாக பயன்படுத்திய மின்சார யூனிட்டுகளை கணக்கீடு செய்ததோடு, தணிக்கை செய்து மின்வாரியத்திற்கு ஏற்பட்ட இழப்பான சுமார் ரூ.21 லட்சத்தை கட்ட வேண்டும் என தெரிவித்தனர்.

ஆனால், அந்நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கட்ட முடியாது என சட்டம் பேசியதுடன் மின்சாரத் துறை அமைச்சரை தெரியும் என தெரிவித்தனர். பல முறை நோட்டீஸ் கொடுத்தும் மின்வாரியத்திற்கு ஏற்படுத்திய இழப்பை செலுத்தாததல் அந்நிறுவனத்திற்கு கொடுக்கப்பட் மின் இணைப்பை துண்டித்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல நிறுவனங்கள் சட்ட விரோதமாக மின்சாரத்தை உபயோகித்து லாபம் பெறுவதுடன் மின்வாரியத்திற்கு பல கோடி ரூபாய்களை இழப்பை ஏற்படுத்துகின்றன. இந்த இழப்புகள் எல்லாம் சாதாரண ஏழை – எளிய மக்கள் மீது மீண்டும் டெபாசிட் தொகை கட்ட நேரிடுகிறது. துணிச்சலாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!