Perambalur: Employment at the District Child Protection Unit Office!

தமிழ்நாடு அரசு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ், மிஷன் வாட்சாலயா (Mission Vatsalya) வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி மாவட்ட ஆட்சித்தலைவரை தலைவராக கொண்டு இயங்கி வரும் பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில், 1 பாதுகாப்பு அலுவலர் நிறுவனம் சாராதது (Protection Officer Non Institutional Care) தற்காலிக பணியிடம், சிறப்பு சிறார் காவல் அலகில் 2 சமூகப்பணியாளர் (Social Worker) மற்றும் தற்போது காலியாக உள்ள மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் 1 உதவியாளர் உடன் கலந்த கணினி இயக்குபவர் (Assistant cum Data Entry Operator) தற்காலிக பணியிடம் நிரப்பிட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 பாதுகாப்பு அலுவலர் நிறுவனம் சாராதது (Protection Officer Non Institutional Care)  பதவிக்கு (1 பணியிடம் - 1 வருடகால ஒப்பந்த அடிப்படையில்) 42 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வி தகுதி அங்கிகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் முதுகலை (Recognized University) சமூகப்பணி (Social Work) / சமூகவியல் (Sociology) / குழந்தைகள் வளர்ச்சி (Child Development) / மனித உரிமை பொது நிர்வாகம் (Human Rights Public Administration) / உளவியல் (Psychology) / மனநலம் (Psychiatry) / சட்டம் (Law) / பொதுசுகாதாரம் (Public Health) / சமூகவள மேலாண்மை (Community Resource Management) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை படித்திருக்க வேண்டும் அல்லது அங்கிகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் (Recognized University) இளங்கலை சமூகப்பணி (Social Work) / சமூகவியல் (Sociology) / குழந்தைகள் வளர்ச்சி (Child Development) / மனித உரிமை பொது நிர்வாகம் (Human Rights Public Administration) / உளவியல் (Psychology) / மனநலம் (Psychiatry) / சட்டம் (Law) / பொது சுகாதாரம் (Public Health) / சமூகவள மேலாண்மை (Community Resource Management) / பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி களப்பணியில் கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை (Implementation, monitoring and supervising in the preferably In the field of Women & Child Development) / சமூக நலம் (Social Welfare) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை படித்திருக்க வேண்டும் மற்றும் திட்டங்கள் உருவாக்குவதில் 2 ஆண்டுகள் முன் அனுபவம், மேலும் கணினி இயக்குவதில் திறமை வாய்ந்தவராக இருத்தல் வேண்டும். ஒருமாதத்திற்கு - ரூ.27,804 தொகுப்பூதியமாக வழங்கப்படும்.

சமூகப்பணியாளர் (Social Worker) பதவிக்கு (2 பணியிடம் – 1 வருடகால ஒப்பந்த அடிப்படையில்) 42 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வி தகுதி Graduate Preferably in B.A in Social Work (சமூகப்பணி) / Sociology (சமூகவியல்) / Social Sciences (சமூகஅறிவியல்) from a recognized university அங்கிகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் ஏதேனும் ஒன்றை படித்திருக்க வேண்டும். மேலும் தகுதி Weightage for work experience candidate, Proficiency in Computers ஆகும். ஒருமாதத்திற்கு ரூ.18,536/- தொகுப்பூதியமாக வழங்கப்படும்.

உதவியாளர் உடன் கலந்த கணினி இயக்குபவர் (Data Entry Operator) பதவிக்கு (1 பணியிடம் – 1 வருடகால ஒப்பந்த அடிப்படையில்) 42 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வி தகுதி 12th Pass from a recognized Board / Equivalent Board with Diploma / Certificate in Computers மற்றும் தகுதி Weightage for typing and work experience candidate ஆகும். ஒரு மாதத்திற்கு ரூ.13,240/- தொகுப்பூதியமாக வழங்கப்படும்.

இப்பபணியிடங்களுக்கான விண்ணப்பத்தினை https://perambalur.nic.in என்ற மாவட்ட இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை 14.02.2025 அன்றுக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, இரண்டாவது தளம், எம்.எம்.பிளாசா, திருச்சி மெயின்ரோடு, பெரம்பலூர் மாவட்டம் – 621212 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் பணியிடம் குறித்த தகவல்களுக்கு 04328- 275020 என்ற தொலைபேசி எண் மூலமாகவும், மிஷன் வாட்சாலயா (Mission Vatsalya) வழிகாட்டுதல் நெறிமுறைகளை பார்த்தும் தெரிந்து கொள்ளலாம். மேலும் முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ் நகல்கள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என கலெக்டர் கிரேஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!