Perambalur: Equality Day celebrations on the occasion of Ambedkar’s birth anniversary; Collector and MLA distributed government welfare assistance worth Rs. 29 crores!
பெரம்பலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கூட்ட அரங்கில் சமத்துவ நாள் விழா நேற்று நடந்தது. கலெக்டர் கிரேஸ் பச்சாவ், பெரம்பலூர் சட்ட மன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் 9 பயனாளிகளுக்கு ரூ.24.5 லட்சம் மதிப்பீட்டில் தீருதவித் தொகை, கல்வி உதவித் தொகையும், தாட்கோ மூலமாக 10 பயனாளிகளுக்கு ரூ.25.36 லட்சம் மதிப்பீட்டில் நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தில் நிலம் வாங்குவதற்கும், தொழில் முனைவோர் உதவித்தெகையும்,
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 385 பயனாளிகளுக்கு ரூ.385 லட்சம் மதிப்பீட்டில் இணையவழி வீட்டு மனைப் பட்டாவிற்கான ஆணைகளையும், மகளிர் திட்டம் சார்பில் 78 பயனாளிகளுக்கு ரூ.195.7 லட்சம் மதிப்பீட்டில் அமுத சுரபி கடன், ஒருங்கிணைந்த பண்ணைத் தொகுப்பு கடன் மற்றும் வங்கி கடன் உதவிகளுக்கான ஆணைகளையும், கூட்டுறவுத்துறையின் சார்பில் 21 பயனாளிகளுக்கு ரூ.9.95 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்புக்கடன், கிசான் கடன் அட்டைகளையும்,
வேளாண்மைத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.1.57 லட்சம் மதிப்பீட்டில் வேளாண் இடுபொருட்களையும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.8.63 லட்சம் மதிப்பீட்டில் வெங்காய கொட்டகை அமைப்பதற்கான ஆணைகளையும், வேளாண் பொறியியல்துறை சார்பில் 05 பயனாளிகளுக்கு ரூ.9.30 லட்சம் மதிப்பீட்டில் வேளாண் இயந்திரங்களையும், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் 03 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் கறவை மாடு கடனுதவிகளையும், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் 31 பயனாளிகளுக்கு ரூ.1.60 லட்சம் மதிப்பீட்டில் கல்வி உதவித்தொகை மற்றும் திருமண நிதியுதவித்தொகையும்,
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.1.10 லட்சம் மதிப்பீட்டில் திருமண நிதியுதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கமும், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் 680 பயனாளிகளுக்கு ரூ.2,226 லட்சம் மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்லம் மற்றும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணைகளையும், நகராட்சி சார்பில் 05 தூய்மை பணியாளர்களுக்கு சீருடை மற்றும் பணிப்பாதுகாப்பு உபகரணங்களும், 05 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகளையும் என பல்வேறு துறைகளின் சார்பில் 1,243 பயனாளிகளுக்கு ரூ.2,891.71 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நலத்திட்ட உதவிகள் பெறவந்த பயனாளிகளுக்கு உணவு, குடிநீர் வசதியும், வாகனங்களில் பாதுகாப்பாக அழைத்துச் செல்லவும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல துறை, தாட்கோ, கூட்டுறவுத் துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.