Perambalur: Eraiyur Sugar Mill Milling Work: Transport Minister Sivasankar inaugurates!
தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், பெரம்பலூர் எம்.பி அருண்நேரு மற்றும் பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் ஆலை அரவையினை தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த ஆண்டு ஆலை அரவைக்கான கரும்பு அளவுகள் மொத்தம் 2 லட்சம் டன்கள் மதிப்பீடு செய்யப்பட்டும், தினசரி 2,800 டன்கள் அரவை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. அரவைப் பருவத்தில் சாராசரி சர்க்கரை கட்டுமானம் 9.75% எடுத்திட இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவில் கரும்பு உற்பத்தியாளர்கள், வாகன உரிமையாளர் சங்க பிரதிநிதிகள், அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் ஆலையின் ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டுமென ஆலையின் தலைமை நிர்வாகி ரமேஷ் தெரிவித்துள்ளார்.