Perambalur: Ex-servicemen can start businesses under the Chief Minister’s Kaakum Karangal scheme; Collector informs!
தமிழ்நாடு முதலமைச்சர் 78- வது சுதந்திர தினத்தன்று (15.08.2024) சுதந்திர தின உரையின் போது முன்னாள் படைவீரர் நலனுக்காக அறிவிக்கப்பட்ட “முதல்வரின் காக்கும் கரங்கள்” என்ற புதிய திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்களுக்கு தொழில் தொடங்க ஒரு கோடி வரை வங்கி கடன் உதவியும், இத்திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு கடன் தொகையில் 30 சதவீத மூலதன மானியமும் மற்றும் 3 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படும் எனவும், இத்திட்டத்தின் கீழ் கடன் பெறுவோருக்கு திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி போன்ற தேவையான பயிற்சிகளும் அளிக்கப்படும் என அறிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்களுக்கு வயது வரம்பு இல்லை மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் திருமணமாகாத மகன், மகள் மற்றும் விதவை மகள் 21 முதல் 55 வயதிற்குள்ளும், கடனுதவி பெற குறைந்தபட்ச கல்வி தகுதி மற்றும் வருமான வரம்பு ஏதும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதி வாய்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் “முதல்வரின் காக்கும் கரங்கள்” திட்டத்தின் கீழ் கடனுதவி பெற https://exwel.schemes.com என்ற இணையத்தளம் வாயிலாக விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இத்திட்டம் தொடர்பாக மேலும் விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 04329 221011 என்ற போனிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கிரேஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.