Perambalur: Exams for admission to 8th Class in Dehradun Military College in January 2026 session; Collector information!
டேராடுனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் ஜனவரி 2026 பருவத்தில் எட்டாம் வகுப்பில் மாணவர்கள் (சிறுவர்கள் மற்றும் சிறுமியர்கள்) சேருவதற்கான தேர்வு 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு மாணவ, மாணவியர்கள் 01.01.2026 அன்று 11 1/2 வயது முதல் 13 வயதிற்குட்பட்டவராக (02.01.2013)க்கு பிறகு. 01.07.2014க்கு முன்பு பிறந்திருந்தல் வேண்டும்) முதல் 13 வயது இருத்தல் வேண்டும். மேலும் 01.01.2026 அன்று அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 7ம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவோ உள்ள மாணவ, மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களின் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருந்தல் வேண்டும்.
இச்சேர்க்கைக்கான விண்ணப்பப்படிவம், தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தேர்விற்கான வினாத்தாள் தொகுப்பை அஞ்சலில் பெற பொதுப்பிரிவினர் ரூ.600/-க்கும் பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பினர் சாதிச்சான்றுடன் ரூ.555/-க்கும், THE COMMANDANT. RIMC FUND, DRAWEE BRANCH, HDFC BALLUPUR, CHOWK, DEHRADUN(BANK CODE-1399) UTTARAKHAND ல் மாற்றத்தக்க வகையில் வரைவோலை (Demand Draft) எடுத்து The Commandant, Rashtriya Indian Military College, Garhi Cantt, Dehradun. Uttrakhand, Pin-248 003 என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம் அல்லது www.rimc.gov.in என்ற இணையவழி மூலமாகவும் கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் (இரட்டிப்பு படியுடன்) தேர்வுக் கட்டுபாட்டு அலுவலர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையச் சாலை, பூங்கா நகர், சென்னை-600 003 என்ற முகவரிக்கு 31.03.2025 அன்று மாலை 05.45 மணிக்குள் கிடைத்திடுமாறு அனுப்பிட வேண்டும். இது குறித்து மேலும், விவரங்களை www.rimc.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக மாணவ. மாணவிகள் அறிந்து கொள்ளலாம் என கலெக்டர் கிரேஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.