Perambalur: Executive officer arrested for accepting bribe to renovate temple!

பெரம்பலூரில் பழைய புதுப்பிக்க பரிந்துரை கடிதம் வழங்க 3000 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கோவில் செயல் அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர் அருகே செங்குணம் கிராமத்தில், உள்ள மிகவும் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. அதனை, புதுப்பிப்பதற்காக, அக்கோயிலின் அறங்காவல் குழுவினர் அணுகிய நிலையில், அதற்கான பரிந்துரை கடிதத்தை இந்து சமய அறநிலை துறை இணை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க செங்குணம் கிராமத்தை சேர்ந்த அறங்காவலர் குழு நிர்வாகி சிவனசேன் (30), என்பவரிடம் பெரம்பலூர் மதன கோபாலசாமி கோயில் செயல் அலுவலரான மயிலாடுதுறையை சேர்ந்த குருசாமி மகன் கோவிந்தராஜ் (59), 3000 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். கொடுக்க விரும்பாத சிவனேசன், பெரம்பலூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுக்களை சிவனேசனிடம் கொடுத்து அனுப்பினர். சிவனேசனிடம், செயல் அலுவலர் பணத்தை பெற்ற போது, மறைந்திருந்த, டிஎஸ்பி ஹேமச்சித்ரா தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் செயல் அலுவலரை கைது செய்தனர். இச்சம்பவம் அறநிலையத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!