Perambalur; Export of small onions to Kerala; Sub-Collector Gokul inaugurated!

பெரம்பலூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் சின்ன வெங்காயத்தை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூலம் கேரள மாநில தோட்டக்கலை மேம்பாட்டு கழகத்திற்கு ஏற்றுமதியை சப் - கலெக்டர் சு.கோகுல் இன்று  செட்டிக்குளத்தில் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் அதிக அளவில் சின்ன வெங்காயம் உற்பத்தி செய்திடும் மாவட்டமாக பெரம்பலூர் மாவட்டம் உள்ளது. விவசாயிகள் சின்ன வெங்காயத்தை  வெளிச்சந்தைக்கு விற்கும் போது இடைத் தரகர்களால் தங்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தெரிவித்தனர்.  கடந்த 17ஆம்தேதி நடைபெற்ற ஏற்றுமதி பொருட்கள் ஊக்குவிப்புக் குழுக்கூட்டத்தில் சப் -கலெக்டர் கோகுல் தனிக்கவனம் செலுத்தி, பெரம்பலூர் மாவட்டத்தில் விளையும் சின்ன வெங்காயத்தை கேரள மாநில தோட்டக்கலை மேம்பாட்டு கழகத்திற்கு ஏற்றுமதி செய்திட பேசி ஒப்புதல் பெற்று, அதனடிப்படையில், கேரள அரசின் HORTICORP நிறுவனத்தோடு பெரம்பலூர் மாவட்டத்தில் விளையும்“ சின்ன வெங்காயத்தை உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களிடமிருந்து பெற்றுக் கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் 31.12.2024 அன்று நடந்தது.  

அதனடிப்படையில், இன்று செட்டிகுளத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஆலத்தூர் மற்றும் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட 8 டன் அளவிலான சின்ன வெங்காயத்தை ஆலத்தூர் கூட்டுப் பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு கேரள மாநிலத்திற்கு, சப் – கலெக்டர் சு.கோகுல் தொடங்கி வைத்தார். ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.60 முதல் ரூ.65 வரை விற்பனை செய்யப்பட்டதால் சின்ன வெங்காயம் பயிரிடும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். கேரள மாநில தோட்டக்கலை மேம்பாட்டு கழகத்தின் தேவைக்கு ஏற்ப பெரம்பலூர் மாவட்டத்தில் அதிக விளைச்சல் பெறக்கூடிய மற்ற பயிர்களையும் ஏற்றுமதி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) எஸ்தர் பிரேமகுமாரி, வேளாண்மை அலுவலர்கள் செண்பகம், கிருஷ்ணவேணி, உழவர் உற்பத்தியாளர் நிறுவன இயக்குநர்கள் துரைராஜ், விநாயகம் உள்பட விவசாயிகள் பலர் உடனிருந்தனர்

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!