Perambalur: Farmers need an agricultural identification number to get the 20th installment of PM Kisan: Collector’s information!

பெரம்பலூர் மாவட்டத்தில் பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.6,000 ஆண்டுக்கு நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. தற்பொழுது மத்திய அரசால் வேளாண் அடுக்ககத்தின் கீழ் விவசாயிகளுக்கான தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் தனிப்பட்ட அடையாள எண் பெறாத விவசாயிகளுக்கு பி.எம்.கிசான் திட்டத்தின் 20-வது தவணை வழங்கப்படுவது நிறுத்தப்படும். பெரம்பலூர் மாவட்டத்தில் 53,996 விவசாயிகள் பி.எம்.கிசான் திட்டத்தில் இணைந்து உள்ளனர். இவர்களில் 28,479 விவசாயிகள் மட்டுமே வேளாண் அடுக்கக தனிப்பட்ட அடையாள எண்ணை பெற்றுள்ளனர். மீதமுள்ள 25,517 விவசாயிகள் வேளாண் அடுக்கக தனி அடையாள எண் பெறாமல் உள்ளனர். இவர்கள் 31.03.2025-ஆம் தேதிக்குள் அடையாள எண்ணை பெற்றால் மட்டுமே பி.எம்.கிசான் மற்றும் பயிர் காப்பீடு திட்டப் பலன்கள் கிடைக்கப் பெறும். எனவே, இதுவரை அடையாள எண் பெறாத விவசாயிகள் அருகில் உள்ள பொது சேவை மையத்தை அணுகி இலவசமாக இந்த அடையாள எண்ணை பெற்றிட கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஆதார் அட்டை. ஆதார் அட்டை எண்ணுடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண், சிட்டா உடன் பொது சேவை மையத்தை அணுகி அடையாள எண்ணை பெற்று கொள்ளலாம் என கலெக்டர் கிரேஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!