Perambalur: Female passengers at the new bus stand are facing severe hardship due to lack of free toilet facilities! Urinating in front of men in a hurry!

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நாளொன்றுக்கு லட்சக்கணக்கான பயணிகள் பல்வேறு ஊர்களில் இருந்து வந்து செல்கின்றனர். இங்கு வரும் பெண் பயணிகள் குளிர்காலம் என்பதால் பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்தில் நிற்கும் பொழுது சிறுநீர் கழிக்க முடியாமல் பெரம்பலூர் மாவட்ட த்தில் இருந்து வரும் பயணிகளும், வெளியூர் மாவட்டத்தில் இருந்து வரும் பயணிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஏற்கனவே இருந்த இலவச கழிப்பறையை இடித்துவிட்டு வாய்க்கால் கட்டும் பணி தற்போது நீண்ட நாட்களாக நடந்து வருகிறது.

இதனால், அரியலூர், ஆத்தூர், பூலாம்பாடி, அரும்பாவூர் மலையாள பட்டி, அன்னமங்கலம், பிள்ளையார் பாளையம், துறையூர், செட்டிகுளம், அகரம் சிகூர், லப்பைகுடிக்காடு, மருவத்தூர் கல்பாடி, வேப்பூர், கொளக்காநத்தம்,, வி களத்தூர் கை களத்துர்ர் ஆகிய சுற்றுவட்டார பகுதியில் இருந்து வந்து செல்லும் ஆயிரக்கணக்கான பெண் பயணிகள் சிறுநீர் கழிக்க இலவச கழிப்பறை இல்லாததால் பெரும் சிரமம் அடைகின்றனர். மேலும் பேருந்தில் இருந்து இறங்கியவுடன் திறந்தவெளியை நோக்கி செல்கின்றனர். ஆனால், திறந்த வெளிப்பகுதியில் மது பிரியர்கள் மது அருந்திக்கொண்டு உல்லாசமாக இருப்பதால் பெண்கள் பெரும் பயத்துடன் பாதி சிறுநீர் கழித்த நிலையில் பேருந்து வந்து அடைவதாக புகார்கள் தெரிவிக்கின்றனர்.

சிறுநீர் கழிப்பறை கட்டும் பணி எந்தவித தொடக்க நிலையிலும் இல்லாமல் மாதக்கணக்கில் கிடப்பில் கிடப்பதால் கடும் அவதிப்படுவதாக தெரிவிக்கும் அவர்கள், பெரம்பலூர் மாவட்டத்தை ஒரு பெண் ஒருவர் கலெக்டராக உள்ளார்ர் அவருக்கும் புரியவில்லை, பெரம்பலூர் நகராட்சிக்கு பெண் ஒருவரே தலைவராக உள்ளார் அவருக்கும் பெண்களின் அவதி புரியவில்லை என்று வேதனை தெரிவித்தனர். இதுகுறித்து கலெக்டருக்கு தகவல் தெரிவிக்க முயன்றால் அவர் போனையே எடுப்பதில்லை. ஒரு சிறிய மாவட்டமான பெரம்பலூரில் இந்த நிலைமை என்றால் இவர்கள் பெரிய மாவட்டமாக இருக்கும் சேலம் விழுப்புரம் கடலூர் போன்று இருந்தால் எப்படி நிர்வாகம் செய்வார்கள் என பொதுமக்கள் நோநது செல்கின்றனர்.

இந்திய ஜனநாயகத்தின் சாபக்கேடு :

மக்களுக்காக பணி செய்யக்கூடிய வேலையாட்கள் காரில் ராஜா வாழ்க்கை வாழ்வதும், ஜனநாயகத்தின் முதலாளிகள் எனப்படும் மக்கள் ஏழைகளாகவும், சிறுநீர் கழிக்க கூட சிரமப்படுவது இந்தியத் ஜனநாயகத்தின் சாபக்கேடு பொதுமக்கள் வேதனையான தெரிவிக்கின்றனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!