Perambalur: Fingerprints of family members must be registered in ration cards by 31.03.2025; Collector informs!
பெரம்பலூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் பெற்றுவரும் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதார்கள் தங்கள் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் கைரேகையினை 31.03.2025-க்குள் கட்டாயம் பதிவு செய்திட வேண்டும். மேலும், பிறமாநிலம் மற்றும் மாவட்டங்களில் வேலை நிமித்தமாகவும், கல்லூரி படிப்பிற்காக தங்கியுள்ள குடும்ப அட்டை உறுப்பினர்கள் அவர்களுக்கு அருகாமையில் உள்ள நியாய விலைக் கடையில் ஆதார் நகலுடன் சென்று e-KYC பதிவு செய்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், நியாய விலை கடை விற்பனை முனைய இயந்திரத்தில் e-KYC பதிவு செய்யும்போது விரல் ரேகை பதிவு ஆகாத நபர்கள் அருகாமையில் உள்ள இ-சேவை மையத்தில் தங்களது கைரேகையினை புதுப்பித்த பின்பு e-KYC பதிவு செய்து கொள்ளலாம். பள்ளி / கல்லூரிகளில் படித்து வரும் மாணவ / மாணவியர்கள் விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிறு தினங்களில் தங்களது கைரேகையினை பதிவு செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது. அனைத்து குடும்ப அட்டை உறுப்பினர்கள் கட்டாயம் தங்களது கைரேகை பதிவினை 31.03.2025 –க்குள் பதிவு செய்திட வேண்டும் என கலெக்டர் கிரேஸ் விடுத்துள்ளள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.