Perambalur: Fire accident: Woman burns after turning on stove without realizing gas leak; receives intensive treatment!

பெரம்பலூர் மாவட்டம், அன்னமங்கலம் அருகே உள்ள அரசலூர் கிராமத்தை சேர்ந்தவர் அம்மாசி மனைவி முத்தம்மாள்(72), என்ற மூதாட்டி, இன்று காலை அவரது வீட்டில் ஏற்பட்டடிருந்து கேஸ் கசிவானதை உணராமல், அடுப்பை பற்ற வைத்தார். அங்கு வீடு முழுவதும் நிறைந்திருந்த கேஸ் குபீர் என தீப்பற்றி எரிந்ததால், வீட்டுக்குள் இருந்த முத்தம்மாள் உடல் முழுவதும் தீப்பற்றியது. அனலின் தாக்கத்தால், அவர் அலறி துடித்தார். சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரை பெரும் சிரமத்தில் மீட்டனர். ஆனால், அவர் உடல் முழுவதும் 100 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டது. வலியால் மரண ஓலமிட்ட அவரை உயிருக்கு ஆபத்தான நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு , அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவல் அறிந்த அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தீவிபத்து குறித்து, நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!