Perambalur: Fire breaks out at private TV showroom; Items worth one crore rupees, including Rs.15 lakh cash, were destroyed by fire!

பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில், தனியாருக்கு, சொந்தமான டிவி ஷோரூம் இயங்கி வருகிறது. இன்று அதிகாலை சுமார் ஒரு மணி அளவில், திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், கடை தீப்பற்றி எரிவது குறித்து மேனஜர் சவுந்தருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அனைத்து கடை ஊழியர்களும் சம்பவ இடம் வந்துள்ளனர். முன்னதாக தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது குறித்து புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த, பெரம்பலூர் டவுன் போலீசார் தீ விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் இன்று காலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதற்கட்ட விசாரணையில், ரூ.15 லட்சம் ரொக்கம் உள்பட ஒரு கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்துள்ளது என தெரியவந்துள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!