Perambalur: Firefighters rescue a python caught in a fishing net and release it into the forest!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தொண்டமாந்துறை அருகே உள்ள விஜயபுரம் கிராமம் உள்ளது. பச்சமலை தொடரில் இருந்து ஓடை நீரில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவரின் வலையில் மலைப்பாம்பு சிக்கியதாக கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள், மலைப்பாம்பை மீன் வலையில் இருந்து மீட்டு, அதனை விசுவக்குடி நீர்த்தேக்கம் அருகே உள்ள பச்சமலையில் பாதுகாப்பாக விட்டனர். மலைப்பாம்பு அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது. இதனால், விஜயபுரம் சுற்றுப் வட்டாரப்பகுதி மக்கள் மலைப்பாம்பை ஆர்வமாக வந்து பார்த்து சென்றனர். இதனால், அப்பகுதியில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.