Perambalur: Following Election Officer Sakthivel, the District Collector also conducts an awareness campaign regarding voting at the weekly market.

கடந்த மார்ச்.21ம் தேதி கொளக்காநத்தம் வாரச்சந்தையில் குன்னம் தேர்தல் நடத்தும் அலுவலர் சக்திவேல் , 18 வயது நிரம்பிய அனனவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, இன்று மாலை பாடாலூர் வாரச்சந்தையில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ந.மிருணாளினி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை இன்று வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
குறிப்பாக கடந்த தேர்தல்களில் 70 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகள் பதிவான வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றது.
சில வியாபாரிகள் தாங்கள் விற்பனைக்கு வைத்திருந்த காய்கறிகளை 100% VOTE என்ற வடிவில் அடுக்கி வைத்திருந்ததை பார்வையிட்ட கலெக்டர் மிருணாளினி வியாபாரிகளை பாராட்டினார். வருவாய்துறை பணியாளர்கள் பலர் உடனிருந்தனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497