Perambalur: For about 75 years since independence, members of the same community have been holding the position of Panchayat President!
தமிழகத்தின் பல ஊர்களில் தலைவராக ஆதிதிராவிடர்கள் பல இன்னல்களை இன்று வரை கூட அனுபவித்து வருகின்றனர். ஆனால், பெரம்பலூர் மாவட்டத்தில் விதிவிலக்காக ஆதிதிராவிடர்களே தொடர்ந்து சுமார் 75 ஆண்டுகளாக ஊராட்சித் தலைவராக பதவி அலங்கரித்து வருவது பாராட்டப்பட வேண்டிய ஒன்று!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது அசூர் கிராமம். இந்த கிராமத்தில் தான் சுமார் 75 ஆண்டுகளாக ஆதி திராவிடர் வகுப்பை சேர்ந்தவர்களே தொடர்ந்து ஊராட்சி மன்றத் தலைவர்களாக பதவியை அலங்கரித்து கொண்டு வருகின்றனர்.
அசூர் மக்கள் தொகையில் சுமார் 3ல் 2 பங்கினராக ஆதிதிராவிடர்கள் வாக்காளர்களாக இருப்பதால், பொதுத் தொகுதியாக அறிவித்தாலும், மாற்று சமூகத்தின் வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு ஆதிதிராவிடர்களே தனி மெஜாரிட்டியாக அதிகளவு வாக்குகளை பெற்று தலைவராகி விடுவார்கள். மாற்று சமூகத்தினருக்கு தலைவர் வாய்ப்பு என்பது எட்டாக் கனியாக இருக்கும். அம்பேத்கர் கூறிய கற்பி, ஒன்றுசேர், புரட்சி செய் என்பதை இந்த கிராமத்தில் காணலாம்.
அரசியலில் சமத்தவம், சகோரத்துவம், சமய சார்பின்மை என்பதெல்லாம் மேடை முழங்கங்களுடன் முடிந்துவிடுகிறது. அரசியல் கட்சிகள் கூட சாதியை பார்த்துதான் தொகுதி வேட்பாளராக அறிவிக்கின்றனர்.
வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்பதை போல, ஒரு பகுதியில் எந்த சமூகத்தினர் பெரும்பான்மையாகவும், ஆளுமைத்திறன் கொண்டவர்களாகவும் உள்ளார்களோ அவர்களே, அப்பகுதியில் ஆளும் வர்க்கமாக முடிவெடுக்கின்றனர். இதற்கு லப்பைக்குடிக்காடு பேரூராட்சியை இப்பகுதியில் தெரிவிக்கலாம். பெரும்பான்மையாக இஸ்லாமியர்கள் வசிப்பதால், அங்கு இஸ்லாமியர்களே தலைவர்களாக வருகின்றனர். அங்கு வசிக்கும் மாற்று மதத்தினர் தலைவராக வாய்ப்புகள் குறைவு. சில நேரங்களில் அரசியல் கட்சியால் விதிவிலக்காக மாறலாம். உதராணத்திற்கு பெரம்பலூர் எம்.பி தொகுதி.
உயர்ந்த சமூகத்தினர் என்பது அரசு வழங்கும் சாதி சான்றிதழில் இல்லை. பெரும்பான்மையாக வசிக்கும் மக்களின் ஒற்றுமையே அங்கு ஜனநாயகத்தை முடிவெடுத்து நிலைநிறுத்துகிறது.