Perambalur: Former Alathur AIADMK chairman’s husband dies in an accident!

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் கொளத்தூரை சேர்ந்தவர் வெண்ணிலா. அவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆலத்தூர் யூனியன் சேர்மனாக இருந்தார். இவரது கணவர் ராஜா (54), இவர் எறையூரை அடுத்துள்ளள பெருமத்தூர் டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வந்தார்.

இன்று அதிகாலை சுமார் 12:45 மணிக்கு அலுவல் முடித்து பெரம்பலூருக்கு பைக்கில் திருச்சி சென்னை NH 38 தேசிய நெடுஞ்சாலையில் வாலிகண்டபுரம் கருப்பையா கோயில் எதிரில் சென்றுக் கொண்டிருந்தார். சாலையில் வந்த மாடு மோதியதில் விபத்திற்கு உள்ளானார். பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையின் போது, இன்று அதிகாலை சுமார் 3:30 மணி அளவில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த மங்கலமேடு போலீசார் உடற்கூறு ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையின் குறுக்கே மாடு வந்த விபத்தில், சேர்மனின் கணவர் இறந்த சம்பவம் மற்ற வாகன ஓட்டிகளை அச்சமடைய செய்துள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!