Perambalur: Free eye check-up camp inaugurated by Collector SP on the occasion of National Road Safety Month
பெரம்பலூர் நகராட்சி வளாகத்தில், மாவட்ட போக்குவரத்துக் காவல் துறையின் சார்பில், தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு டிரைவர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாமை கலெக்டர் கிரேஸ் போலீஸ் எஸ்.பி ஆதர்ஷ் பசேரா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கண் பரிசோதனை செய்ய வந்த டிரைவர்களிடம், மருத்துவர்கள் அறிவுறுத்தும் படி கண் கண்ணாடிகளோ அல்லது மருத்துவ சிகிச்சைகளோ மேற்கொண்டு, சாலை விதிகளை கடைபிடித்து வாகனங்களை இயக்கிட வேண்டும் என அறிவுறித்தப்பட்டது.
இம்முகாமில் சுமார் 260க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர். கண் பரிசோதனைக்கு வந்திருந்த ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்களுக்கு போக்குவரத்து விதிகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுபிரசுரங்களையும், மரக்கன்றுகளையும் கலெக்டர், எஸ்.பி வழங்கினர்.
இந்நிகழ்வில் ஆர்.டி.ஓ ரவி, தாசில்தார் சரவணன், என்.ஹெச் டிராபிக் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிள்ளிவளவன், டவுன் டிராபிக் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட போலீசார், மேக்ஸ் விஷன் கண் மருத்துவமனை மருத்துவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், கார் ஓட்டுநர்கள் மற்றும் இதர வாடகை வாகன ஓட்டுநர்கள் பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.