Perambalur: Free paper bag making training for people in rural areas of the district!
பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் காகித பை தயாரித்தல் பயிற்சி இலவசமாக அளிக்கப்பட உள்ளது. பயிற்சியில் சேர கடைசி நாள் 17.02.2025. மேலும் இப்பயிற்சியில் பேப்பர் பேக், ஆபிஸ் கவர் மற்றும் ஆபிஸ் பைல், கிப்ட் பேக் , அட்டை பைல், A4 பேப்பர் கவர், கிப்ட் பாக்ஸ், மற்றும் பல காகித அழகு பொருட்கள் செய்வது பற்றி முழுமையாக கற்று தரப்படும்.
10 நாட்கள் இப்பயிற்சி காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடக்கும். பயிற்சியின் போது, மதிய உணவு மற்றும் காலை, மாலை தேனீர் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சி முடிவில் வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும்.
இப்பயிற்சியில் சேர பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் 19 வயது முதல் 45 வயதுக்குபட்ட, எழுத படிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும் . சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும் மேலும் வறுமை கோட்டு எண் அல்லது இலக்கு எண் (PIP) அல்லது AAY / PHH – குடும்ப அட்டை எண் அல்லது குடும்பத்தில் எவரேனும் ஏரி வேலை அட்டை உள்ள கிராமப்புற ஆண்கள் மற்றும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள ஐஓபி வங்கியின் மாடியில் உள்ள (IOB) கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனரிடம் குடும்ப அட்டை, ஆதார் கார்டு, பெற்றோரின் 100 நாள் வேலை அட்டை, பான்கார்டு, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல், 3 பாஸ்போர்ட் சைஸ் அளவு போட்டோ, ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து, ஐஓபி கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், முதல் தளம் சுப்ரமணியம் காம்ப்ளக்ஸ் எளம்பலூர் சாலை என்ற முகவரியல் கொடுக்கலாம். 04328-277896 என்ற எண்ணிலோ 84890 05899, 94888 40328 தொலைப்பேசி மூலமாக தொடர்பு கொள்ளலாம் என அம்மையத்தின் இயக்குனர் ஆனந்தி தெரிவித்துள்ளார்.