Perambalur: Free sewing training for women on behalf of IOB _ RESTI!

model
பெரம்பலூர் மாவட்ட பெண்களுக்கான தையற்கலை பயிற்சி இலவசமாக வரும் 3.04.2025 முதல் பெரம்பலூர் IOB _ RESTI மூலம் அளிக்கப்பட உள்ளது. மேலும் இப்பயிற்சியில் சிம்மிஸ், பெட்டிக் கோடு, பட்டுப் பாவாடை, யூனிஃபார்ம் ஸ்கர்ட், அரைக்கை சர்ட், யூனிஃபார்ம் டிராயர் , பேபி ஃபிராக், கட்டோரி பிளவுஸ் , நைட்டி , சுடிதார் டாப் , அம்பர்லா டாப் , நைட் சூட் ஆகியன பற்றி சிறந்த வல்லுநர்களால் கற்று தரப்பட இருக்கின்றது.
காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 30 நாட்கள் நடக்கும் இப்பயிற்சியின் போது, காலத்தில் மதிய உணவு மற்றும் காலை, மாலை தேனீர் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சி முடிவில் வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும்.
19 வயது முதல் 45 வயதுக்குபட்ட, எழுத படிக்க தெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராகவும், வறுமை கோட்டு எண் அல்லது இலக்கு எண் (PIP) அல்லது AAY – குடும்ப அட்டை எண் அல்லது குடும்பத்தில் எவரேனும் ஏரி வேலை அட்டை. வங்கி கணக்கு புத்தகம், உள்ள கிராமப்புற பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் எளம்பலூர் IOB வங்கியின் மாடியில் உள்ள (IOB) கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்ககலாம் என்றும், குடும்ப அட்டை, ஆதார் கார்டு, பெற்றோரின் 100 நாள் வேலை அட்டை வங்கி கணக்கு புத்தகம் PAN Card ஆகியவற்றின் நகல், 3 பாஸ்போர்ட் சைஸ் அளவு போட்டோ ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து; ஏப்ரல் 2 ஆம் தேதிக்கு சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கு பெற்ற பின் பயிற்சியில் பங்கு பெற அனுமதி வழங்கப்படும் என்றும்,
மேலும் விவரங்களுக்கு ஐஓபி கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், சுப்ரமணியம் காம்ப்ளக்ஸ், எளம்பலூர் சாலை, பெரம்பலூர் – 621212 என்ற முகவரியிலோ 04328277896, என்ற எண்ணிலோ 9488840328 தொலைப்பேசி மூலமாக தொடர்பு கொள்ளலாம் என அம்மையத்தின் இயக்குனர் ஆனந்தி தெரிவித்துள்ளார்.