Perambalur: Free training for recruitment exams for district cooperative societies; Collector’s information!

பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள, உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் நிரப்புவதற்காக www.drbpblr.net என்ற இணையதளம் வழியாக online மூலம் விண்ணப்பிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு கல்வித்தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவு பயிற்சி ஆகும். இப்பணிக்கான எழுத்துத்தேர்வு 11.10.2025 அன்று நடைபெற உள்ளது. இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் 17.09.2025 அன்று முதல் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, இப்பணிக்கு விண்ணப்பித்தவர்கள் விண்ணப்ப படிவம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2, கல்விச் சான்று நகல்கள், ஆதார் அட்டை நகல் போன்ற விவரங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தை அணுகவும்.
கூட்டுறவு தேர்வுக்கான பாடத்திட்டத்தின் அடிப்படையில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். தமிழ் தகுதித் தேர்வுக்கு தனி கவனம் செலுத்தப்படும். இலவச பயிற்சி வகுப்புகள் முடிந்தவுடன் வினாக்கள் குறித்து குழு விவாதம் மற்றும் வல்லுநர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்படும். போட்டித் தேர்வுகளுக்கு பயன்படும் பிரத்யேக இணையதளமான Virtual Learning Portal-ல் இலவசமாக வேலை நாடுநர்களுக்கு பதிவு செய்து தரப்படும். போட்டித் தேர்வர்களுக்கு தேவையான அனைத்து சமச்சீர் (தமிழ்) மற்றும் பாடப்புத்தகங்களுடன் கூடிய நூலக வசதி உள்ளது.
மேலும் விவரங்களுக்கு 04328 – 296352 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அரசு வேலை பெற்று பயன்பெறுமாறு கலெக்டர் ந.மிருணாளினி விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளளர்.










kaalaimalar2@gmail.com |
9003770497